அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினராலேயே, குற்ற புலனாய்வுப் பிரிவில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த லொஹான் ரத்வத்தவை கைது செய்து, சம்பவம் தொடர்பில் முழுமையாக விசாரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேசியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.