இந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் குணவர்தன, இந்த விடயம் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அத்தோடு பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆசிரியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீர்வு வழங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.