• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வது, அனைத்து அரச தலைவர்களதும் நோக்கமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/09/24
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
74 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துச் செயற்படுவது அவசியமெனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் உணவுத் திட்ட மாநாட்டில், இணையவழியூடாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால், இந்த உணவுத் திட்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் 17ஐ அடைவது தொடர்பில், உலக உணவு உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பில், முக்கியமான சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொரோனா தொற்றுப் பரவலானது, உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலைமையானது, காலநிலை மாற்றங்கள் காரணமாக மேலும் மோசமான நிலைமைக்குத் திரும்பவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இரசாயனப் பசளை, களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் தடை செய்ய தனது அரசாங்கம் அண்மையில் எடுத்தத் தீர்மானமானது, நிலையான அபிவிருத்தி தொடர்பான அரச கொள்கையொன்றில் காணப்படும் பிரதான மைல்கல்லாகும் என்று, ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

நீண்ட காலமாக இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்குப் பழக்கப்பட்ட விவசாயிகளின் மனநிலைகளை மாற்றுவது கடினமாகியுள்ளதென்றும் சேதனப் பசளையைத் தேவையானளவு உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்துகொள்வது சவாலானதாக அமைந்திருக்கின்றது என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி, இது தொடர்பிலான தொழில்நுட்ப மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை, இலங்கை அன்புடன் வரவேற்கிறது என்றும் குறிப்பிட்டார்.

சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிக்கும் போது, கிராமிய வறுமையைக் குறைக்கும் வகையில் சந்தைகளை இலக்கு வைக்கும் உணவுச் சங்கிலியை மேம்படுத்தும் தேவை காணப்படுவதோடு, இலங்கையின் உணவுக் கட்டமைப்பை நிலையான வகையில் மேம்படுத்துவதற்கும் மிகச் சிறந்த உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியுமென்று, ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

உணவு மற்றும் விவசாயத்துறை அமைப்புகள் மற்றும் உலக உணவு வேலைத்திட்டத்தினால் இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் தொழில்நுட்ப உதவியைப் பாராட்டிய ஜனாதிபதி, ஏனைய உலகளாவிய அமைப்புகள் மற்றும் அறிவியல் ரீதியிலான நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

தன்னுடைய நாட்டின் பிரஜைகள் மற்றும் உலகத்துக்குச் சிறந்த எதிர்காலத்தை உறுதியளித்தல், அனைத்து உலகத் தலைவர்களதும் நோக்கமாக இருக்க வேண்டுமென்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இது விடயத்தில் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு, அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென்றுத் தெரிவித்தார்.

மனிதர்களைப் போன்றே இந்தப் பூமியின் சுகாதார நலனுக்கான போஷாக்கை வழங்கக்கூடிய வகையில், உலகளாவிய உணவுக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு, இந்த ஐ.நா உணவுத்திட்ட மாநாடு வழிசமைக்குமென, ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான முழுமையான விபரம்

Next Post

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

Related Posts

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!
இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14
பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
இலங்கை

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
Next Post
வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க கோரிக்கை

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 36,710பேர் பாதிப்பு- 182பேர் உயிரிழப்பு!

இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியது மலேசியா

இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியது மலேசியா

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.