இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா தளர்த்தியுள்ளது.
இதன்படி, நிரந்தர வதிவிட அந்தஸ்து, நீண்ட கால வதிவிட அந்தஸ்து அடிப்படையில், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த ஐந்து நாடுகளில் இருந்து மலேசியாவுக்குள் நுழையலாம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு கடந்த ஏப்ரல் 26 முதல் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மலேசியாவின் குடிவரவு பணிப்பாளர் ஜெனரல் கைருல் டைமி தாவுத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பயணிகள் முழுமையாக தடுப்பூசியை பெற்றவர்களாக இருக்க வேண்டும், நாட்டுக்கு வருகை வந்தவுடன் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் சுகாதார அமைச்சினால் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என 5 நாடுகளின் வெளிநாட்டு தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும், அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான தடை, மலேசியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.