நாட்டிற்குள் தேசிய பாதுகாப்பு நல்ல நிலைமையில் தற்போது உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவரை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மாற்றுவதற்கு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் முயன்று வருகின்றனர் என டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் கத்தோலிக்க திருச்சபைகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆனாலும், உண்மையில் தேவைப்படுவது 10- 15 வருட காலத்திற்கான தேசிய நிகழ்ச்சி நிரலாகும் என அவர் கூறியுள்ளார்.