இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மரண வீதம் குறைவடைந்தமைக்கான காரணம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதே என அந்த அமைச்ச சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் எதிர்வரும் வாரங்களில் இந்த மரண வீதம் மேலும் குறைவடையும் எனவும் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


















