தி.மு.கவின் ஆட்சியில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தி.மு.க அரசிடம் புதிதாக எந்த திட்டங்களும் இல்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரம் இந்த அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் குறித்து பேசிய அவர், தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகளும், சில அதிகாரிகளும் திட்டமிட்டு அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
தோல்வி பயத்தின் காரணமாக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இந்த ஆட்சியில் நாணயம், ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.