பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
முதலாம் திகதி செப்டெம்பர் மாதத்தில் இருந்து நேற்றுடன் (புதன்கிழமை) 1.008.751 பேரிற்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 120.000 பேர், வேறு பல தீவிர நோய்களால் நோய்வாய்ப்பட்டவர்களும்;, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் அடங்குவார்கள்.
இவர்கள் மிக இலகுவாக கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகும் ஆபத்து உள்ளமையால், இவர்களிற்கு முன்னுரிமையாக மூன்றாம் அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஒலிவியர் வரன் கூறுகையில், ‘தற்சமயம் 37 சதவீத மக்கள் இந்த மூன்றாம் அளவு போடுவதற்கு முன்னுரிமையாக இருந்த போதிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது. இதனை விரைவுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என கூறினார்.