பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபர்லோ திட்டம், கொவிட் தொற்றினால் பெரும்பகுதிகளை மூட அரசாங்கம் கட்டாயப்படுத்திய பின்னர் 11.6 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கி உதவியது.
ஜூலை மாத இறுதியில் அது இன்னும் 1.6 மில்லியன் தொழிலாளர்களின் வருமானத்தை ஆதரித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் திறைசேரியின் தலைவர், 70 பில்லியன் யூரோ திட்டத்திற்கு பெருமை படுவதாகவும் ஆனால் இப்போது அதை மூடுவதற்கு சரியான நேரம் எனவும் கூறினார்.
அதிகாரப்பூர்வமாக கொரோனா வைரஸ் வேலை தக்கவைத்தல் திட்டம் அல்லது சிஜேஆர்எஸ் என அழைக்கப்படும் இந்த கொள்கை, தொற்றுநோய்க்கான பதிலுக்கு அரசாங்கம் செலவிட்ட பணத்தின் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
மில்லியன் கணக்கான வேலைகளைப் பாதுகாப்பதற்காக இது பரவலாகப் பாராட்டப்பட்டாலும், வணிகம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்களுக்கு மேலும் ஆதரவு தேவை என்று கூறுகின்றன.
கேட்விக் விமான நிலையம் வழியாக செல்லப்பிராணிகளுக்கு வெளிநாடு செல்ல உதவும் விலங்கு எயார்கேயார் நிறுவனத்தின் இயக்குநர் மார்க் ஆண்ட்ரூ, வணிகம் மேம்படவில்லை என்றால் அவரது ஊழியர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறினார்.