முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பவானிபுர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டபோதிலும் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், மேற்குவங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் மம்தா பானர்ஜி களம் இறங்கி இருந்த பவானிபுர் தொகுதியில் மிகக்குறைந்த அளவாக 53 சதவீத வாக்குகள் பதிவாகின.
அந்தவகையில் தற்போது பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மேலும் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், பவானிபூரில் தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.