• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

shagan by shagan
2021/10/03
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக  நேற்று (சனிக்கிழமை) ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகங்களுக்கும் சமூகவலைத்தள நண்பர்களுக்கும் நன்றிகள். செய்திகளில் தொடர்ச்சியாக என்னைப்பற்றி எழுதி எனது பெயரை மக்களின் மனங்களில் நிலைத்து நிற்க உதவியுள்ளீர்கள்.

பத்திரிகையாளர்களிடமும், சமூக வலைத்தள எழுத்தாளர்களிடமும் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். உங்களுடைய எழுத்துக்கள் பிரதேச மக்களுடைய அபிவிருத்தியை பாதிக்காததாக இருக்க வேண்டும். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் அதனை நான் கண்டுகொள்ளமாட்டேன். ஆனால் என்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியில் மக்களுக்கு கிடைக்ககூடிய அபிவிருத்தியை பாதிக்குமாறு எழுதாதீர்கள்.

ஆரியகுளம் புனரமைப்பு என்பது என்னால் தயாரிக்கப்பட்ட திட்டம். அதில் என்ன உள்ளது என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளோம். ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதத சார்பு அடையாளங்களை உட்புகுத்தவில்லை.

உட்புகுத்தப் போவதுமில்லை. நான் முதல்வராக இருக்கும் வரை குளத்தில் எந்தவொரு மதமும் பிரதிபலிக்க இடமளிக்கப்படமாட்டாது. இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் அச்சப்படும் வகையில் போலியான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகம் மற்றும் சமூக வலைத்தள எழுத்தாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

விகாராதிபதியால் அனுப்பப்பட்ட கடிதத்தில் புத்தர்சிலை பற்றி எதுவும் கூறவில்லை. மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது பற்றியே கூறப்பட்டிருக்கிறது.

ஒரு கடிதம் வந்தால் அதனை மாநகர சபைக்கு விடுவதுதே என்னுடைய வழமை. நாவலர் மண்டப விவகாரத்திலும் அதையே செய்தேன். நான் தனித்து முடிவெடுக்க இது என்னுடைய சொத்தல்ல.

அதனை சபையே தீர்மானிக்க வேண்டும். இதனை என்னால் நிராகரிக்க முடியும். ஆனாலும் நான் நிராகரிக்காமல் அதை சபைக்கு விடுவதே வழமை. மதநல்லிணக்க மண்டபம் அமைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதம் உடனடியாக ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு, ஆணையாளர் ஊடாக செயலாளருக்கு அனுப்பபட்டது.

கூட்ட நிகழ்ச்சிகளை தயாரிப்பது செயலாளரே.இந்த கடிதம் அடுத்த சபையில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்போது”மதச்சார்பற்ற இடமாக தொடர்ந்தும் ஆரியகுளத்தை பேணுவதுடன் மக்களுக்கான பொழுதுபோக்கு மையமாக பேணப்படவேண்டும்” என்று நான் தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோளை விடுப்பேன்.அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் சபையின் வேலை.

இப்போது ஆரிய குளம் பகுதியில் முதலாம் கட்ட அபிவிருத்திப்பணிகள் இடம்பெறுகின்றது. முதலாம் கட்டமாக நடைபாதை மற்றும் குளத்தைச் சுற்றி கம்பி வேலியடைத்தல் என்பன இடம்பெறும். இரண்டாம் கட்ட பணிகளுக்குரிய நிதிகளை நன்கொடையாளர்கள் தர முன்வந்தால் அபிவிருத்திப் பணிகள் தொடரும்.

இப்போது ஆரியகுளம்பற்றி முகநூலில் எழுதுபவர்கள் நாவற்குழியில் விகாரை கட்டப்பட்ட போது எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. டிசம்பருக்கு பின்னர் நாங்கள் அதிகாரத்தில் இருக்கமாட்டோம். அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டால் அதனை அரசியல்வாதிகளும் சமூக ஆவலர்களுமே தடுக்க வேண்டும்” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடி : சென்னையை 7 விக்கெட்களால் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

Next Post

பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!
இலங்கை

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கை

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!
இலங்கை

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை காணாமல் ஆக்குவது ? நிலாந்தன்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை காணாமல் ஆக்குவது ? நிலாந்தன்!

கருக்கலைப்பு உரிமை : அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

கருக்கலைப்பு உரிமை : அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.