கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வணிக வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்க பெறும் என அந்தச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அதற்கான எழுத்துமூல ஆவணங்கள் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டதாகவும் இன்றைய தினம் நிதி கிடைக்கும் பட்சத்தில் நாளை மறுதினத்திற்குள் பால்மா தொகுதிகளை விடுவிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் 360 மெற்றிக் டன் பால்மா தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.