சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘தேர்தல் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த தலைமையைக் கொண்டிருக்கிறது.
இதனால் சீனா அமெரிக்காவை மதிப்பதில்லை. சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும்’ என கூறினார்.
தாய்வான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனை தணிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயரதிகாரிகள் இடையே சுவிஸ்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த சூழலில், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுப்பதில் சென்று முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.