ஆப்கானிஸ்தானில் பிரித்தானியவின் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இரண்டு தசாப்த மோதல்களின் போது, மக்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் நோக்கம் கொண்ட இரண்டு சிறிய நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில் ஆப்கானிஸ்தானில் மோதலின் போது கொல்லப்பட்ட 457 பிரித்தானியா வீரர்களுக்கு மலர்வளையம் வைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில், போர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடங்கியது, அமெரிக்க தலைமையிலான கூட்டணி, விமான நிலையங்கள் மற்றும் பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது.
கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில், பிரித்தானிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, 20 வருட போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்த போரில் தனது ஒரே மகனை இழந்த தாய் கிளாரி ஹில், ‘காயம் ஒருபோதும் நீங்காது. அவர் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தினார் என்று நாங்கள் நம்ப வேண்டும்’ என கூறினார். ஜேம்ஸ் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.