“அனைத்திற்கும் முன் பிள்ளைகள்“ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்ட சிறுவர் தின கொண்டாட்டம் இன்று(வியாழக்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மகளிர் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலை மற்றும் ஆரம்பக்கல்வி அமைச்சர் பியல் நிஷாந்த டீ சில்வா பகிஸ்தானின் தற்காலிக உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமெட், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அதுகொரள, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன மற்றும் பல அரச அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான தானியக்க உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கைகளுக்கான தொற்று நீக்கி விசிரும் இயந்திரம், பாடசாலை அபிவிருத்திக்கான விசேட கொடுப்பனவுகள், விதவைப் பெண்களுக்கான கொடுப்பனவுகள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான தையல் இயந்திரங்கள் என்பன இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.

















