நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை சிறுபான்மை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் என மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராசமாணிக்கத்தின் 47வது சிரார்த்த தினம் இன்றாகும்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியிலுள்ள சி.மூ.இராசமாணிக்கம் சிலைக்கருகில் சுகாதார நடைமுறைகளை பேணியவகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் முகாமையாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சி.மூ.இராசமாணிக்கத்தின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு கடந்த எட்டு வருடங்களாக மக்கள் நலன் செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்த ஆண்டும் பல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார்.
இம்முறை கிழக்கு மாகாணசபையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லையெனவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை சிறுபான்மை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் என மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்தார்.