ஐ.பி.எல். ரி-20 தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இதன்படி நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவினை பார்க்கலாம்.
டுபாயில் நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 76 ஓட்டங்களையும் ஜடேஜா 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 13 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களையும் ஹெய்டன் மார்கிரம் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 56 ஓட்டங்களையும் வெங்கடேஷ் ஐயர் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் மோரிஸ், சேட்டன் சக்கரியா, ராகுல் டிவெட்டியா மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 85 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் கொல்கத்தா அணி 86 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராகுல் டிவெட்டியா 44 ஓட்டங்களையும் சிவம் டுபே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், சிவம் மாவி 4 விக்கெட்டுகளையும் லொக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிவம் மாவி தெரிவுசெய்யப்பட்டார்.