நியூரியில் 66,000 பவுண்டுகள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது விநியோகம் செய்யும் நோக்கத்துடன் ஏ தர இந்த போதைப்பொருட்களை வைத்திருந்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விநியோகம், போலி நாணயத்தை வைத்திருத்தல் மற்றும் கிரிமினல் சொத்தை வைத்திருத்தல் போன்ற நோக்கத்துடன் பி தர போதைப்பொருட்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
380,000 சிகரெட்டுகள், 160 கிலோ புகையிலை, 30,000 போலி நாணயங்கள் மற்றும் 10,000 ரொக்கத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 28 வயதான நபர், இன்று (சனிக்கிழமை) நியூரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
பொதுமக்கள் கூறியதைக் கேட்டு அவர்கள் வழங்கும் தகவலின் அடிப்படையில் செயற்பட்டதன் விளைவுதான் இந்த கைது என்று பொலிஸார் தெரிவித்தனர்.