ஒரு அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்கள் செய்த குற்றங்களுக்காக கலைப்பு அல்லது அதன் உறுப்பினர்கள் இராஜினாமா செய்தாலும் அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பார்கள் என ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியமான (HKSAR) அரசாங்கத்தின் பாதுகாப்பு பணியகம் அண்மையில் கூறியுள்ளது.
சீனாவுக்கு எதிரான அமைப்பான ஹாங்காங் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை கலைக்க முடிவு செய்வது குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பாதுகாப்பு பணியக செய்தித் தொடர்பாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது ஹாங்காங்கில் உள்ள பிற சட்டங்களை மீறியதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு அமைப்பும் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் சட்டப் பொறுப்புகளைத் தொடரும் முயற்சியை பொலிஸ்துறை ஒருபோதும் கைவிடாது விடாது எனவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு அரசியல் அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெற்ற உள்ளூர் அமைப்புகள் குறித்து நாங்கள் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வோம் என செய்தித் தொடர்பாளர் உறுதியளித்துள்ளார்.
ஹாங்காங்கில் உள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய அரசாணைகளின் கீழ் அமலாக்க விதிகளின்படி தேவையான தகவல்களை வழங்க அல்லது தேவையான பிற நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு பணியகம் அவர்களைக் கோரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹாங்காங் பொலிஸ்துறை சட்டப்படி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நபர்களின் சட்டப் பொறுப்புகளைத் தொடரும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதி செய்வதாக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.