இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் வருகை தந்துள்ளார்.
இவ்வாறு வருகை தந்துள்ள அவர் இன்று (சனிக்கிழமை) காலை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பின்னர் இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடைபெற்றது.
குறித்த ஆலோசனை முடிவில், இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.