கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசேட நாடாளுமன்ற விவாதம், எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது.
மேலும், குறித்த குழுவினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்ட சில அறிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட இருக்கின்றது.
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பாகவே விவாதம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.