கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் அனைத்து கர்ப்பிணி பெண்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க குடும்ப சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.
இனிவரும் காலங்களில் அவர்களை வீட்டில் லைத்து சிகிச்சை வழங்க முடியாது என அந்தப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரையில் 8 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.