யு.இ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பிரான்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பிரான்ஸ் அணியும் ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சேன் சிரோ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 2-1 என்ற கோல்கள் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது.
பரபரப்பான போட்டியில், பிரான்ஸ் அணி சார்பில், போட்டியின் 66ஆவது நிமிடத்தில் கரீம் பென்ஸிமா ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து கிளியன் எம்பாப்வே போட்டியின் 80ஆவது நிமிடத்தில் வெற்றி கோலைப் புகுத்தினார்.
ஸ்பெயின் அணி சார்பில், மைக்கேல் ஒயர்ஸபால் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இத்தொடரில், முதல்முறையாக பிரான்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதல்முறையாக நடைபெற்ற தொடரில் போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டித் தொடரான யு.இ.எஃப்.ஏ. நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர், ஐரோப்பிய நிர்வாக அமைப்பான யு.இ.எஃப்.ஏ. இன் உறுப்பினர் சங்கங்களின் தேசிய அணிகளால் விளையாடப்படுகின்றது.