பொலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகனான ஆர்யன் கானை எதிர்வரும் புதன்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சொகுசு கப்பல் ஒன்றில் போதை மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை பிணையில் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்றைய தினம் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அவரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலை நீட்டிக்க வேண்டும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து எதிர்வரும் புதன்கிழமை ஆர்யன் கானின் பிணை குறித்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.