அரசாங்கத்திற்கு பல தடைகளும் சவால்களும் வந்தாலும், இதனை அரசாங்கத்தின் இறுதிக் காலமாக எவரும் கருதிவிடக்கூடாது என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நவரம்பர் 12 ஆம் திகதி 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றில் நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
69 இலட்சம் மக்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது போனமையை அமைச்சரவை உள்ளிட்ட தனது அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இது சாதாரண ஒரு கருத்தாகும். குறைகள் இருப்பின் அதனை ஏற்றுக் கொண்டு நிவர்த்தி செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும், இந்த தடைகளை பார்த்து எவரும் அரசாங்கத்தின் இறுதிக் காலமாக இதனை கருதிவிட வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.