இந்தியாவில் இதுவரை 97.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கோவிஷுல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 69.60 கோடி பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 28.13 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தடுப்பூசிகளில் 86.07 கோடி கோவிஷுல்ட் தடுப்பூசிகளும், 11.21 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.