தடைப்பட்டுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையில் மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக, ஈரான் அறிவித்துள்ளது.
வல்லரசு நாடுகளுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையில் வரும் 21ஆம் திகதி மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர்- அப்துல்லாஹியான் அறிவித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கான தலைமை ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் என்ரிக் மோரா, புதிய நிர்வாகம் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கானியை சந்திக்க தெஹ்ரானுக்கு சென்றார். இந்த நிலையில் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் ஈரானிய ஜனாதிபதி பதவிக்கு கடும்போக்கு மதகுரு இப்ராஹிம் ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
ஈரான் மீண்டும் விரைவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது, ஆனால் ஒரு திகதிக்கு உறுதியளிக்கத் தவறியது.
ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை சமீபத்திய மாதங்களில் கணிசமாக துரிதப்படுத்தியது. யுரேனியத்தை அதிக அளவில் செறிவூட்டுகிறது மற்றும் போதுமான அளவு ஆயுதங்கள் கொண்ட யுரேனியத்தை குவிக்கின்றது. சில மாதங்களில் அணு குண்டை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்