மீண்டும் நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என வணிக செயலாளர் குவாசி குவர்டெங் தெரிவித்துள்ளார்.
குளிர்கால நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக ‘பிளான் பி’ யை அமுல்படுத்துமாறு என்.ஹெச்.எஸ் தலைவர் பிரதமரை கேட்டுக்கொண்டார்.
அத்தோடு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் வணிக செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் கட்டாயமாக முக்கவசம் உட்பட சில சுகாதார நடவடிக்கைகளை மீண்டும் கொண்டு வருமாறு என்.ஹெச்.எஸ் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.