நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு கடந்த சில நாட்களாக நீடித்து வருவதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டின் 59 அனல் மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக அதிகரித்து வருவதால் இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரஹலத் ஜோஷி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.