எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் இவ்வாறு எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது