ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மேல் மகாணத்துக்குள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுமென அவர் அறிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் ரயில் பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளும் முன்னெடுக்கபடுமென அவர் மேலும் தெரிவித்தார்.


















