சீனா தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு புதிய கொவிட் தொற்றுகளை பதிவு செய்துள்ள நிலையில், அங்குள்ள பாடசாலைகள், சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.
சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது
சீனா நூற்றுக்கணக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது மற்றும் கடுமையான எல்லை மூடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுஜன சோதனைகளைத் தொடங்கியுள்ள அதிகாரிகள், பரவலைத் தடுக்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.
சீனாவின் சமீபத்திய தொற்று பரவல் சுற்றுலா குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த குழுவில் உள்ள ஒரு வயதான தம்பதியினர். ஷாங்காய்க்கு பயணம் செய்த பின்னர் சியான், கன்சு மாகாணம் மற்றும் உள் மங்கோலியாவுக்கு பயணம் செய்துள்ளது.
இதனால், இந்த வயதான தம்பதியினருடன் தொடர்புடைய பல தொற்றுகள் அந்த நாட்டில் பதிவாகியுள்ளன.
அவர்கள் பெய்ஜிங்கில் உள்ள மக்களுடன், மற்ற நான்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் பயணித்த அனைத்து சுற்றுலா தளங்கள், அழகிய இடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன. வீட்டு வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.
தொற்று பரவலை தடுக்க 40 இலட்சம் பேர் வசிக்கும் லான்ஷோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லான்ஷோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா எதிர்மறை சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜியான் மற்றும் லான்ஷோ இடையே 60 சதவீத விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள ஜியாயுங்குவான், முதல் சுற்று பூஜ்ஜிய நேர்மறை தொற்றுகளைக் கண்டறிந்த பிறகு, இரண்டாவது சுற்று வெகுஜன சோதனையைத் தொடங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தயாராகி பெய்ஜிங் வருவதால் இது பெய்ஜிங்கிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.