வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் தற்போது பெய்த மழையால் 90 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன.
வடகிழக்கு பருவமழை எதிர்வரும் 26ஆம் திகதி தொடங்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால், தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26ஆம் திகதி தலைமை செயலகத்தில் இருந்தவாறு மாவட்ட ஆட்சியாளர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதில் பல்வேறு மாவட்ட ஆட்சியாளர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்களும் உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் பேரிடர் துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படடவுள்ளது.