ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து இசைக்கலைஞர்கள் தங்கள் இசைத்துறையை கைவிட்டுள்ள நிலையை அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
எங்கள் இசை மக்களை பாதிக்கும் ஒன்று அல்ல. கிராமத்தில் அல்லது வேறு எங்காவது ஒரு திருமண விருந்து இருந்தால் நாங்கள் அங்கு செல்வோம். இசைக் கச்சேரிகளைச் சேய்வோம்’ என்று கூறுகின்றார் இசைக்கலைஞர் ஜாபர் கலிலி.
அத்துடன் பண்பாடு மற்றும் தேசிய இசை, இசைத்துறையே தமது வருமானத்தின் ஒரே வழியாகவும் உள்ளது என்று கூறும் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இசைத்துறையை கைவிட்டுவிட்டதால் தற்போது கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
தொடர்ந்தும் தமது செயற்பாடுகளுக்கு அனுமதிக்காவிட்டால் தங்கள் இசைத்துறையைக் கைவிடும் நிலைமை ஏற்படும் என்பதோடு தமக்கான மாற்று வேலை வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், நாங்கள் தகவல் மற்றும் கலாசார அமைச்சகத்துடன் தொடர்புடையவர்கள், ஆகவே நடுக்கடலில் தத்தளிப்பதைப்போன்று இந்த நாட்டில் வாழமுயாது. எமது எதிர்காலம் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்று இசைக்கலைஞரான காஜி கூறினார்.
அதேபோன்று வெளிநாட்டில் வசிக்கும் ஆப்கானிய பாடகி ஆரியானா சயீத் கூறுகையில், ‘அவர்கள் எங்கள் இசைத்துறையை தொடர்வதற்கு அனுமதிப்பார்கள் என்று நம்புகின்றேன்’ என்று கூறியுள்ளார்.