சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இடைக்கால அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுளனர்.
இதனை அடுத்து மக்கள் ஆட்சியை கலைத்து நாடு முழுவதும் அவசர நிலையை இராணுவம் அறிவித்துள்ளது.
இதேவேளை தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றதாகவும் இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாகவும் 80 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீண்ட காலம் ஆட்சியில் இருந்த உமர் அல் பஷீர் அரசாங்கம் கலைக்கப்பட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இதனை அடுத்து இராணுவம் மற்றும் ஜனநாயக சார்பு தலைவர்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்த போதும் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிற நிலையில் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.
எனவே ஜனநாயக ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த கோரி தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கார்டூம் முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு இணைய சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.