திரவ நனோ நைட்ரஜன் உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உர இறக்குமதியில் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்ற நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்தார்.
மேலும்இ றக்குமதி செய்யப்பட்ட உரத்தின் விலை உள்ளிட்ட விடயங்கள் குறித்த உண்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.
நைட்ரஜன் உரத்தினை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், அதன் தரம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலால் அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார்.
இதனால் விவசாயிகள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே திரவ நனோ நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.