புதிய மீள்குடியேற்றத் திட்டம் எப்போது திறக்கப்படும் என்பதை அறிவிக்குமாறு, பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஆப்கானியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தலிபான் ஆட்சியின் கீழ் தங்களின் பாதுகாப்பு குறித்து அஞ்சும் பலர், பிரித்தானியாவுக்கு வரத் தகுதியுடையவர்களா என்பதை அறிய காத்திருக்கின்றனர்.
தற்போது நாட்டில் தலைமறைவாக உள்ளவர்கள், குடும்ப வீடு தலிபான்களால் தாக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ‘நாம் எவ்வளவு அதிகமாக காத்திருக்கிறோமோ, அவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம்’ என கூறியுள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி புதிய ஆப்கானிய குடிமக்கள் மீள்குடியேற்றத் திட்டத்தை பிரித்தானியா அரசாங்கம் அறிவித்தது.
(ஆப்கானில் பிரித்தானிய படையினருக்கு உதவிய முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்கள், மொழிப் பெயர்ப்பாளர்களுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுகின்றது)
இதன்படி, முதல் ஆண்டில் 5,000 பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்களையும், எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 பேரையும் பிரித்தானியாவில் மீண்டும் குடியமர்த்த உறுதியளித்தது.
மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.