அனுமதியின்றி வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் அமுலில் உள்ள தடையை அடுத்த வாரம் நீக்குவதாக அவுஸ்ரேலியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த 19 மாதங்களாக எல்லை கட்டுப்பாடுகள் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டிருந்தால் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியும் உள்நாட்டவர்களுக்கே பொருந்தும் என குறிப்பிட்டுள்ள அவுஸ்ரேலியா அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இருப்பினும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்போம் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.