நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.