ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், இன்று மாலை அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் கூட்டாக அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக அரச கூட்டணி கட்சியொன்றின் தலைவரொருவர் அறிவித்துள்ளதாக தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தமை தற்போதைய அரசியல் மற்றும் நாட்டின் நிலவரங்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அரச உயர்மட்டத் தலைவர்களின் பதில் திருப்திகரமானதாக இல்லை என்பதால், இந்த முடிவை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.