தாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 19ஆயிரத்து 6பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் தாய்லாந்தில் இதுவரை 18இலட்சத்து 84ஆயிரத்து 973பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 658பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 84பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 99ஆயிரத்து 144பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 432பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 66ஆயிரத்து 823பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.