சீனாவின் வருடாந்த உருக்கு இரும்பு உற்பத்தியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உருக்கு இரும்புத் தொழிற்துறை சங்கம் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பதப்படத்தப்படாத உருக்கு இரும்பு வருடாவருடம் குறைவடைந்து செப்டெம்பர் மாதத்தில் 21.2 சதவீதமாக அதாவது, சுமார் 2.5 மில்லியன் தொன்களாக காணப்பட்டுள்ளது.
இதனை தேசிய புள்ளியியல் அலுவலக புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி கைக்சின் குளோபல் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி புள்ளிவிபரங்களின் பிரகாரம் பார்க்கையில் நான்காம் காலண்டின் உற்பத்தி இவ்வாறு காணப்படும் பட்சத்தில் மொத்த ஆண்டு உற்பத்தி சுமார் 30மில்லியன் தொன்கள் குறைவடைந்து ஒரு பில்லியன் தொன்களாக காணப்படும் என்று தொழில் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளரும், தலைமைப் பொருளாதார நிபுணருமான வாங் யிங்nஷங் கூறினார்.
அத்துடன், வருடாவருடம் உற்பத்தியைக் குறைக்கும் அரசாங்கத்தின் இலக்கை இந்தத் தொழில்துறை வெற்றிகரமாக முகங்கொடுக்கும் என்று வாங் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டைப் போலல்லாது கொரோனா காரணமாக முதல் நான்கு மாதங்களில் உற்பத்தி குறைந்த போது, இந்த ஆண்டு உற்பத்தி அதிகளவில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு இரண்டாது அரையாண்டில் படிப்படியாகக் உற்பத்தி குறைந்ததாகவும் வாங் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி பல ஆண்டுகளாகவே உருக்கு இரும்புத் தொழிற்துறையைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருவதோடு 2017 முதல் இந்தத் தொழில்துறையில் ஈடுபடுவர்களை குறைத்துக் கொள்வதையும் திட்டமாகக் கொண்டிருந்தது.
சீனா 2060க்குள் கரிமவாயு வெளியேற்றத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளதோடு நாட்டின் காபன் வெளியேற்றத்தில் உருக்கு இரும்பு தொழிற்துறை 15 சதவீதத்தை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.