அமெரிக்க டொலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது, தற்போது பாகிஸ்தான் ரூபாவின் பெறுமதியானது டொலருக்கு 175 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க டொலருக்கு நிகரான பாக்கிஸ்தான் ரூபாயின் சரிவு, அந்த நாட்டின் அந்நியச் செலாவணி விகிதத்தின் மீதான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் அந்த அழுத்தங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ள போதும் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் ரூபாவின் வீழ்ச்சி தொடர்கிறது. பாக்கிஸ்தானில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் விலைகள் அனைத்தும் விலையுயர்ந்துள்ளன.
அத்துடன், பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய கண்டனங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேநேரம், எஸ்.டி.பி. வங்கியின் ஆளுநர் ரெசா பகீர், ரூபா மதிப்பு வீழ்ச்சியை ஆதரித்து, அது வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கு நன்மை பயக்கும் என்றும், நாட்டில் பணவீக்கம் செயற்கையானது என்றும் அது கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரது கத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.