கொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-20 அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சவால்கள் இருந்தபோதும் இந்த நோய்தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. 100 கோடி தடுப்பூசி தவணைகளை இந்தியா செலுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டின் இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது எங்கள் குடிமக்களுக்கு மட்டுமன்றி உலகின் பிற பகுதிகளுக்கும் கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.