மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கே முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது
அதேநேரம், இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது 2 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்பதால், தட்டுப்பாடின்றி தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.