ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டில் பயன்படுத்தப்படும் சுரங்கவழியினுடனான ரயிலில் இந்தத் தாக்குல் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ரயிலிலிருந்து அதிகளவான மக்கள் ஓடிச் சென்று ஜன்னல்களினூடாக வெளியேறும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட 20 வயது மதிக்கத்தக்க நபரை ஜப்பான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் டோக்கியோ பயணிகள் ரயிலில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.