கடந்த வாரம் பிரான்ஸால் கைப்பற்றப்பட்ட ஒரு பிரிட்டிஷ் இழுவை படகு, சுற்றுச்சூழல் செயலாளரின் பரிந்துரைகளை மீறி, லு ஹார்வில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கடற்பரப்பில் பிரான்ஸின் படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கும் உரிமம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான மோதல் இடம்பெற்று வருகின்றது.
தமது மீனவர்களுக்கு பிரித்தானியா அனுமதி மறுப்பதாக பிரான்ஸ் குற்றம் சாட்டிவரும் நிலையில் பிரெஞ்சு துறைமுகங்களில் பிரித்தானிய படகுகளை தடுப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியது.
அத்தோடு பிரிட்டிஷ் பொருட்கள் மீதான எல்லை சோதனைகளை பிரான்ஸ் மேலு கடுமையாக்கியுள்ளது.
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய ஒப்பந்தத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் பிரான்ஸ் தனது அச்சுறுத்தல்களை வாபஸ் பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரித்தானியா வலியுறுத்தியது.