சூடானின் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் ஒரு புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்படிக்கைக்கு தயாராகிவருகின்றனர்.
கடந்த வார ஆட்சிக் கவிழ்ப்பை மாற்றியமைப்பதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி மற்றும் நீக்கப்பட்ட பிரதமருக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று செவ்வாய்க்கிழமை தலைநகர் கார்ட்டூமில் இடமபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 25 ஆம் திகதி பொதுமக்கள் தலைமையிலான அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது. இந்நிலையில் அரசாங்கத்தை மீண்டும் நிறுவுவது நாட்டில் ஒரு தீர்வுக்கு வழி வகுக்கும் என தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.