சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் பல ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள சிரிய அரச செய்தி நிறுவனமான சனா, இதனால் பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறியுள்ளது.
ஈரான் ஆதரவு போராளிகளின் இராணுவ நிலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் இலக்குகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை, சிரியாவின் தலைநகரின் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்றும் இருப்பினும் அவை சிரியாவினால் தடுக்கப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டது.
ஒக்டோபர் 14 அன்று, மத்திய சிரியாவில் ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சிரிய அரசாங்கத்துடன் இணைந்த ஒன்பது போராளிகளும் கொல்லப்பட்டனர்.
நாட்டின் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.