கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தொழிநுட்ப ஆலோசனைக் குழு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்த கிளினிகல் சோதனை முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் பரீசிலித்து வந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகளின்படி இந்த தடுப்பூசி அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றுக்கு 77.8 சதவீத பாதுகாப்பையும், புதிய டெல்டா மரபணு மாற்ற வைரஸ் தொற்றுக்கு 65.2 சதவீத பாதுகாப்பையும் தருவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.